
உன்னைப்பற்றி
மீண்டும் கவி எழுத
முயற்சித்தேன்.
திணறினேன்.
ஒருநாள் முழுவதையும்
வீணாக்கினேன்.
எதுவும் எழுதவில்லை.
மறுபடியும் சில நாட்கள்
என்னோடு
பேசாமல்,பார்க்காமல்
இருந்து பார்.
மீண்டும் நூறு பக்கங்களை
எழுதித் தள்ளுகிறேன்.
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
No comments:
Post a Comment