Monday, January 31, 2011

தேடல்


கவின் , வனப்பு, அழகு , பேரழகு 
என்றெல்லாம் தமிழ் அகராதியில் 
சொன்ன போதிலும் 
அவையெல்லாம் உன்னிடம் ஒப்பிடும் போது 

ஆயிரத்தில் ஒரு பங்கு அல்லது
பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்பது போலவே
தோன்றுகிறது.

அதனால்தான் 
வேற்று மொழி அகராதிகளை எல்லாம் 
புரட்டி கொண்டிருக்கிறேன்.
ஒரே வார்த்தையில் உன் அழகை 
சொல்லி விட  வேண்டுமென்று.

ஆனால்,
இன்று வரை இயலவில்லை.

Thursday, September 30, 2010

கனவு வருகை பதிவேட்டில்
சனி, ஞாயிறு, விடுமுறை நாள்
என்றெல்லாம்  பார்க்காமல்
100 விழுக்காடு வருகையை
பதித்துக் கொள்கிறாய்.
நினைவு வருகை பதிவேட்டில் மட்டும்
பூஜ்ஜிய விழுக்காட்டை பதிக்கிறாய்.
என் இதய  வகுப்புகளில் உன்னை
சேர்த்துக் கொள்ளவா?
நீக்கிவிடவா?
யோசித்து யோசித்து பார்த்தாலும்
இன்னமும் புலப்படவில்லை
சிறையில் தரப்படும்
கடுங்காவல் தண்டனைக்கும் -உன்  ரத்தச்
சிரையில் தரப்படும் கடுங்காதல் தண்டனைக்கும் 
வித்தியாசம் என்னவென்று.  

Monday, September 20, 2010

தாலி இல்லா திருமணம்.
வீடு இல்லா குடித்தனம்.
தாம்பத்யம் இல்லா மணவாழ்க்கை.
அவளுடன் இரு வருடம்.
-இந்த அலைபேசியில்.

இன்று
நீதிமன்றம் இல்லா 
விவாகரத்து.
-அதே தொலைபேசியில்.


______________________________

ஆண்டின் மொத்த நாட்களின்
எண்ணிக்கையை விட 
அதிகமாய் இருக்கிறது.
என் நாட்குறிப்பேட்டில் 
இடம்பெறும் 
-உன் பெயர்களின் எண்ணிக்கை.

______________________________________


மருத்துவமனை   
கட்டிலில் - நீ
அருகில் - நான்
நிற்கிறேன் பார்த்துக்கொண்டே .
முகம்  நீலம்
மூக்கில்  குழாய்
முகத்தில்  வீக்கம்
உடலில்  களைப்பு
 - ஏனடி என்னை  அழ  வைத்தாய் ?

___________________________________

உன்னை   ஞாபகப்படுத்தும் 
கண்ணில்  படக்கூடிய
பொருட்களை  எல்லாம்
உன்னிடமே   கொடுத்து  விட்டேன்
கண்ணிற்குள்  உள்ள
உன்னை  மட்டும்
கொடுக்க  தெரியவில்லை 

________________________________________
திருப்பி தர
இனி  என்னிடம்
எதுவும்  இல்லை
இதயத்திலுள்ள
உன்னைத் தவிர.

_______________________________________

சிறிது  காலம்
மறக்க சொன்னபோதே
என்னால்  முடியவில்லை
இப்போது
நிரந்தரமாக
மறக்க  சொல்லியிருக்கிறாய்
அதையும்  பார்போம் !

_______________________________________

இவைகளை  எல்லாம்
குப்பையில்  போட்டாலும்  சரி
தீயிட்டு  எரித்தாலும்  சரி
அழிபவை அந்த  பொருட்கள் மட்டும்  தான் .
என்னில்  உள்ள  உன்  நினைவுகள்  அல்ல.


___________________________________________


அதே  குரல்
அதே  "சாப்டாச்சா?"
அதே  "I love U"
அதே  "டியர்"
அதே  "டார்லிங்"
அதே  முத்தம்
அதே  அக்கறை
அதே முகம்
அதே  stupid சசி
-இரண்டு  வருடங்களாக .

சலித்து விட்டதா  ?
"விட்டுவிடு" என்கிறாய் !!!.

________________________________________


மீன்கள்  நீரை  விட்டு 
காற்றுக்கு  வந்தால்
இறந்து  விடும் .
மனிதன்  காற்றை விட்டு  
நீருக்கு  சென்றால்  இறந்து  விடுவான் .
அதுபோலத்தான்  நானும் .
உன்  இதயத்திலிருந்து  வெளிவந்தால்
இறந்து  விடுவேன் .
இப்படி  சொல்லாமல்  கொள்ளாமல்  
வெளியேற  சொன்னால்
எங்கு  போவது ? 
உள்ளேயே  வைத்து  கொள் (ல் ).
என்  உயிர்  உன்  கைகளில் .
இல்லை  இல்லை
உன்  இதயத்தில் .


______________________________________________


ஒரே  இரவில் 
அத்துணை இரவுகளின் 
உறக்கங்களையும்
பறித்துக் கொண்டாய் 
ஒரு   10 நிமிட  உறக்கம்  
கடன்  கொடு  இன்று .
கனவிலாவது  உன்னை
கண்டு  கொள்கிறேன் .


_________________________________________


இறந்த    பின்பு 
சொர்க்கம்  செல்வேனா?
நரகம்  செல்வேனா ?
என்ற  கேள்வி  
எல்லோர்  மனத்திலும்  உண்டு .
நானோ  தெள்ள தெளிவாய் 
அறிந்திருக்கிறேன் .
நரகம் தான் செல்வேன்.
எப்படியா?
இப்போது     உன்  நினைவுகளில்
வாழ்கிறேன் .
சொர்கத்திலிருந்து  சொர்க்கத்திற்கே    
மீண்டும்  செல்ல 
முடியாது  அல்லவா ?


_________________________________________________

பார்க்காமல்   வந்த  காதல்
பார்க்காமல்  வளர்ந்த  காதல்
பார்த்த  பின்பும்  தொடர்ந்த  காதல்
இன்று  என்னை  'பார்' வெறுக்க  வைத்தது .


__________________________________________________


என்னிடம்  கொண்ட  
உன்  அதே  வெட்கம் 
இன்று  வேறொருவனிடம் .
-சற்று  தரம்  குறைந்து .


___________________________________________________


உண்மை  பைத்தியத்திற்கு  கூட 
கிடைக்காத  ஒன்று  
எனக்கு  கிடைகிறது 
உன்   மேல்
நான்  கொண்ட  பைத்தியத்தால்.
'அக்மார்க்'  பைத்திய  முத்திரை .


__________________________________________________-

காதலில்  தோற்றுப்  போனவர்களும்
ஏமாற்றப்பட்டவர்களும்   தான்
நன்கு  கவி  எழுதுவார்கள்  என  நம்புகிறேன்
எனக்கே  கவிதை  வருகிறதே!

_____________________________________________________


என்  இதயத்தை
ஒவ்வொரு  முறை
காயப்படுத்தும்  போதும்
பார்த்து  நடந்து  கொள்கிறாய்
பட்ட  காயத்தில் படக்  கூடாது  என்று .
காயத்தின்  மேல்  எல்லாம்  கருணை கொள்கிறாய் . 
என்  மேல்  கொண்டால்  என்ன ?


______________________________________________________

அப்பா
அண்ணா
வகுப்பு  ஆசிரியர்
பள்ளி  முதல்வர்
பாட  ஆசிரியர்
விரிவுரையாளர்
தோழன்
தோழி
மூன்றாம்  மனிதன்
இவர்களில்  யாரிடம்
அர்ச்சனை
வாங்கிய  போதும்
உரைக்கவில்லை .
எந்த  ஆற்றலையும்
வீண்  செய்யாத  உன்  மௌனம்
என்னைச்  சாகடிக்கிறது.


______________________________________________


 மாலை 4.30 க்கு  உன்னைச்   சந்திக்க  வேண்டும் .
என்னை  ஆயத்தம்  செய்கிறேன்.
12 மணியிலிருந்து .
2 மணிக்கு  பேருந்தில் . . .
2.45 லிருந்து  3.45 வரை  பேருந்து  நிலையத்தில் . . .
3.45 லிருந்து  4.10 வரை  மீண்டும்  பேருந்தில் . . .
4.10 லிருந்து    4.35 வரை   பேருந்து  நிறுத்தத்தில் .
. . .
கல்லூரி  பேருந்து  வருகிறது .
நிற்கிறது .
நீயும்  இறங்குகிறாய் .
தோழிகளுடன்   பேசி  
முத்துக்களை 
உதிர்த்து  கொண்டே  வருகிறாய் .
மண்ணிற்கு  வலிக்காமல்
நடக்கிறாய்  தேரென .
இதே  காட்சி
பல  நாட்கள்  நிகழ்கிறது
சுரிதாரில் 
சில  நாட்களும்
புடவையில்  
மிகச்  சில  நாட்களும்
பார்க்கிறேன்  உன்னை.
எனக்காக ஓரிரு  வினாடிகள்
உன்  பூ இதழ்களை அசைத்துப்
பேசிய  நாட்களில்
பயணித்த  களைப்பும் , 
காத்திருந்த  களைப்பும் 
காற்றோடு போனது . . .
பேசாத  நாட்களில்
முழு  ஆயுளும்   
வீணாய்  போனது .
கள்ளி  ஏனடி  என்னை  காக்க வைத்தாய்?


___________________________________________________


Thursday, May 27, 2010


உவமை எது?
உவமேயம் எது?
குழப்பத்தில் தமிழ் இலக்கணம் மறக்கிறேன்.
உன்னையும்,ரோஜாவையும்
பார்க்கும்போது.

Saturday, May 15, 2010


உன்னைப்பற்றி
சாதாரணமாகச்
சொன்னாலே
வர்ணிக்கிறேன் என்கிறார்கள்.
நண்பர்கள் -இனி
வர்ணித்தால்
என்னவென்று
சொல்வார்களோ?

என்னுடன் நீ
பேசாத நாட்களில்
கண் சிமிட்டும் நேரம் கூட
முழு நாளாய்த் தெரிகிறது.
என்னுடன் நீ
இருக்கும் நாட்களில்
அந்த நாளே
கண் சிமிட்டும் நேரமாய்
முடிந்துவிடுகிறது.

உன்னை ஞாபகப்படுத்தும்
கண்ணில் படக்கூடிய
பொருட்களை எல்லாம்
உன்னிடமே கொடுத்துவிட்டேன்.
கண்ணிற்குள் உள்ள
'உன்னை' மட்டும்
கொடுக்கத் தெரியவில்லை.

திருப்பித்தர
இனி என்னிடம்
எதுவும் இல்லை.
இதயத்திலுள்ள
'உன்னைத்தவிர.

சிறிது காலம்
மறக்கச் சொன்னபோதே
என்னால் முடியவில்லை.
இப்போது
நிரந்தரமாக
மறக்கச் சொல்லியிருக்கிறாய்.
அதையும் பார்ப்போம்.

உன் உதடுகளோ,
என் முன்பு.
சர்க்கரை நோயாளியாய்
நான் உன் முன்பு.

இன்று என்னவளின்
பிறந்தநாள்.
ஏதேனும்
விலை மதிப்பற்ற
சிறந்த பரிசொன்று
தரவேண்டுமென ஆசைதான்.
அவளை, அவளுக்கே
தர எனக்கு விருப்பமில்லை.
என்னிடமே அவள் இருக்கட்டும்.

எறும்பு,தேனீ போல
நீ சிந்தும்
வெட்கத்தை எல்லாம்
சேகரித்து வைக்கின்றேன்.
மீண்டும் உன்னை
எப்போது பார்ப்பேன் என்று
யாருக்குத் தெரியும்?

STUPID! IDIOT!
அதே வார்த்தைகள்தான்.
அவள் சொல்லும்போது
அழகாய் இருக்கின்றன.
பிறர் சொல்லும்போது
அதற்கு
எதிர்மறையாய்த் தானே தெரிகிறது.

ஒரே நகரம்
வெவ்வேறு கல்லூரி.
நீ மாணவி.
நான் மாணவன்.
ஊர் சுற்றவில்லை.
சந்திப்புக்கள் நிகழவில்லை.
தேநீர் விடுதி செல்லவில்லை.
பூங்காக்கள் போகவில்லை.
தழுவல்கள் தரப்படவில்லை.
முத்தங்கள் கொடுக்கப்படவில்லை.
இரண்டு வருடங்களாய்
இன்னமும் காதலர்களாய்
நாம்.

மேலே சொன்னவைகள்
நேர்மறையாகட்டும் -நம்
திருமணத்திற்கு ஏற்பாடு

செய்யச்சொல்.

உன்னைப்பற்றி
மீண்டும் கவி எழுத
முயற்சித்தேன்.
திணறினேன்.
ஒருநாள் முழுவதையும்
வீணாக்கினேன்.
எதுவும் எழுதவில்லை.

மறுபடியும் சில நாட்கள்
என்னோடு
பேசாமல்,பார்க்காமல்
இருந்து பார்.
மீண்டும் நூறு பக்கங்களை
எழுதித் தள்ளுகிறேன்.

ஒவ்வொரு முறையும்
உன் வெட்கம் மட்டுமே
வெட்கமில்லாமல்
எட்டிப் பார்க்கிறது.
நீயோ
அதன் பின்னால்
ஒளிந்து கொள்கிறாய்.
பேரழகி என்று உன்னை
நான் சொன்னதையெல்லாம்
உன் வெட்கம்
பொய்யாக்கி விடுமோ என்று
பயமாய் இருக்கிறது-ஏனெனில்
உன்னைவிட உன் வெட்கம்தான்
அழகாய் இருக்கிறது.

பிடித்தவைகள்
என்னவென்று கேட்டால்,
அடுக்குகிறாய்.
'சிவப்பு ரோஜா'
'அண்ணன்'
'ஊஞ்சல்'
'கருப்பு'
'நீலம்'
'ஒன்றா, ரெண்டா பாடல்'
'நூடுல்ஸ்' என.
ஆனால்
என்னிடம் அடுக்குவதற்கு
ஒன்றும் இல்லை.
ஒரே வார்த்தைதான்.அதுவும்
ஒரேழுத்து வார்த்தைதான்
'நீ'

இன்னும்
எத்தனை நாட்கள்
வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன்.
உனக்காக.

பேசிக் கொள்ளாமல் இருப்பதால்
எனக்கு மட்டும்தான்
இத்தனை வலியா?
இல்லை.
உனக்கும்தான்.
எனக்காகத்தான்
இல்லை இல்லை
நமக்காகத்தான்
தாங்கிக்கொள்கிறாய்
எனும்போது
இன்னமும் என் காதல்
கூடுகிறது.

தலைவலிக்கும்,
வயிற்றுவலிக்கும்
இதர வலிகளுக்கும்
வலி நிவாரணி
இருக்கும்போது
ஏன் எனக்கு மட்டும்
மருந்து இல்லை?
இந்த வலியைத் தாங்கித்தான்
ஆகவேண்டுமா
என்னுடன் நீ பேசும் வரைக்கும்.

காதலில் வலி உண்டு
என்பதெல்லாம் பொய்.
காதலுக்கு
நேரடி அர்த்தமே

வலி தான்.

இந்த இரவும்
உறக்கமில்லை.
விநாடிகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
உன்னுடன் பேசும்
நாளிற்காக.

திருடர்கள்
மயக்க மருந்து கொடுத்துத்தான்
அபகரிப்பார்கள்.
நீயோ
வெட்கத்தை வீசி 
அபகரிக்கிறாய்.
'இதயத்தை'.

உன்னுடன் பேசி
இரண்டு நாள் ஆனதாக
நாட்காட்டி சொல்கிறது.
மனதோ
இரண்டு நூற்றாண்டு என்கிறது.
எதை நம்புவது?

நீ என்னுடன் பேசாத
இந்த நாட்களில்
பதிவு செய்யப்பட்ட

உன் குரலைக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
இப்போது

அதற்கும்
வழி இல்லாமல்
போய்விட்டது.
என் அலைபேசியோ வீட்டில்.
நானோ விடுதியில்.

ஸ்காட்லான்ட் போலிசை விட
சித்ரவதை செய்கிறாய்
பேசாமல் இருந்து.

கிட்னி ,கண்
திருடிவிடுவார்கள்
பார்த்து இருந்துகொள் என
அம்மா சொல்லியிருக்கிறாள்.
பார்த்துத்தான் இருந்தேன்
அப்போதும் திருடிவிட்டாள்.
'சாகச திருடி'
இதயத்தை.

செல்லவே மாட்டேன்
என அடம் பிடிக்கின்றன.
உன்னுடன் இல்லாத நிமிடங்கள்.



கொஞ்சம்
பொறுமையாய் இரு.
நேரிலேயே தருகிறேன்
முத்தத்தை.
தொலைபேசியில் வீணாக்க வேண்டாம்
உன் சொத்துக்களை.

என்னை தவிர
பிறருக்காக அழுதது
அன்றுதான் முதல்முறை.
பலன் கிடைத்தது என் அழுகைக்கு.
பலன் கிடைத்ததற்கு பலன் வேண்டுமல்லவா?
மணந்துகொள்(ல்) என்னை.

நீ என்னுடன்
பேசுவதில்லையாம்.
தூக்கங்கள் எல்லாம்
கோபித்துக்கொண்டு
என்னிடம் வருவதில்லை.
ஒரு வார்த்தையாவது பேசு.
இன்றாவது தூங்குகிறேன்.

ஒரு வெள்ளிக்கிழமை.
அன்றுதான் உன்னை
புடவையில் பார்த்தேன்.
சற்றும் எதிர்பார்க்கவில்லை
இவ்வளவு அழகை பூமியில் பார்ப்பேனென்று.

please click on 'older posts' below this post to see next page of poems